Friday, 22 January 2016

திருத்தலங்களில் வாஸ்து

                        “வாஸ்து சாஸ்திரத்தால் பணம் வருமா?” என்பது ஒர் முக்கியமான கேள்வியாக அனைவரிடத்திலும் இருந்து வருகின்றது. ஒர் மனிதனின் வாழ்கையில் பணம் என்பது ஒரு சிறிய பகுதியே. பணம் மட்டும் இருந்தால் நிம்மதி கிடைத்து விடாது. அது இல்லாலும் நிம்மதி கிடைக்காது.
எனவே வாஸ்து சாஸ்திரத்தால் பணம் வருமா என்று சிந்திப்பதை விட்டு விட்டு, வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் வசிக்கும் அனைத்து இடங்களையும் அமைத்துக் கொள்வதால் பணத்துடன் அனைத்து சுகங்ளையும் நாம் அடைய முடியும் என்பதை உணர வேண்டும்.

                          எனது அனுபவத்தில் “வாஸ்து பலம்” இல்லாத இடத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த பலர் “வாஸ்து பலம்” வரும்படி மாற்றியமைத்த உடன் அனைத்து நலன்களும் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

                          எனவே வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒருவர் வசிக்கும் இடம் அமையும் போது அவர் அனைத்து வசதிகளையும் அடைகின்றார் என்பது மறுக்க முடியாத ஆதாரபூர்வமான உண்மையாகும்.

No comments:

Post a Comment